போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் பிசுபிசுத்தது: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் பிசுபிசுத்தது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
அமைச்சர் துரைமுருகன் பேட்டி
அமைச்சர் துரைமுருகன் பேட்டி


காட்பாடி: தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் பிசுபிசுத்தது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம், காட்பாடியில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று மாவட்டத்தில் உள்ள 4 லட்சத்து 49 ஆயிரத்து 311 பேருக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1000 ஆகியவற்றை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:
பல்கலைக் கழக துணைவேந்தர் நியமன குழுவில் ஆளுநர் திரும்ப பெற்றது வரவேற்க்கத்தக்கது. அண்மையில் தூத்துக்குடி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெய்த மழை அந்த மாவட்டங்களில் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதனை சரி செய்யும் பணியில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மழையின் காரணமாக அந்த பகுதிகளில்  750 ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, தாமிரபரணி ஆற்றில் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனையும் சரி செய்யும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது.

கடந்த ஆட்சியாளர்கள் ரூ.5 லட்சம் கோடி கடன் வைத்துவிட்டு சென்றார்கள் அதற்கு வட்டி கட்ட வேண்டிய நிலையில் தமிழக அரசு உள்ளது.

அதனையும் செலுத்தி, மக்களுக்கான அரசின் திட்டங்களையும் தற்போதைய திமுக அரசு நிறைவேற்றி வருகிறது.

மேலும், தமிழக அரசுக்கு நிதிச்சுமை இருந்த போதிலும், திட்டங்களை நிறைவேற்றியும், இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளையும் தமிழக அரசு சரி செய்து வருவதாக அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

பின்னர் அமைச்சர் துரைமுருகனிடம் தமிழ்நாட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஒரு சிலர் தான் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், பெரும்பாலானோர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் பிசுபிசுத்தது என்று பதிலளித்தார். 

துணைவேந்தர் நியமன குழுவில் ஆளுநர் திரும்பப் பெற்றது வரவேற்கத்தக்கது என்று துரைமுருகன் கூறினார்

காவிரி நீர் மேலாண்மை வாரியத்தில் அழுத்தம் கொடுப்பீர்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, அவர்களிடம் நிலமையை எடுத்துக் கூறத்தான் முடியும், அழுத்தம் எப்படி கொடுக்க முடியும் என துரைமுருகன் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com