
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக ஜனவரி 12ஆம் தேதி அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என உணவுபொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.
பொதுவாக இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரிசி ரேஷன்அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ. 1000, ஒரு கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்பட உள்ளது.
மேலும், இதற்கான விநியோகம் இன்றுமுதல் (ஜன. 10) ஜனவரி 14-ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. ரொக்கத்தொகையை பெறுவதற்கான டோக்கன்கள் ஜன. 7 முதல் வழங்கப்பட்டது. டோக்கன்கள் அடிப்படையில் நாளொன்றுக்கு 150 முதல் 200 பேருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது.
பொங்கல் தொகுப்பு வழங்குவதற்காக ஜன.12 (வெள்ளிக்கிழமை) ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.