கூடலூரில் ஆண்டாள் சமேத பெருமாளுக்கு திருக்கல்யாணம்

தேனி மாவட்டம், கூடலூரில் உள்ள ஸ்ரீ கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடார வெள்ளியை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தாயார் ஆண்டாளுடன் தம்பதி சமேதராக அருள்பாலிக்கும் பெருமாள்
தாயார் ஆண்டாளுடன் தம்பதி சமேதராக அருள்பாலிக்கும் பெருமாள்


கம்பம்: தேனி மாவட்டம், கூடலூரில் உள்ள ஸ்ரீ கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடார வெள்ளியை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூடலூரில் மிகப்பழமையானதும், புராதான மிக்கதுமானது ஸ்ரீ கூடலழகியபெருமாள் கோயில். இங்கு தாயார் ஆண்டாளுடன் தம்பதி சமேதராக பெருமாள் அருள்பாலித்து வருகிறார்.

ஆண்டிற்கு ஒருமுறை அபிஷேகம்
மார்கழி 27 -ஆம் வெள்ளிக்கிழமை கூடார வெள்ளியை முன்னிட்டு அதிகாலை முதலே பெண் பக்தர்கள் திரண்டனர். திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் முடிந்தவுடன் கோயில் மூலவராக உள்ள கூடலழகிய பெருமாளுக்கு ஆண்டிற்கு ஒருமுறை அபிஷேகம் என்ற ஆகமவிதிப்படி வெள்ளிக்கிழமை அபிஷேகம் நடைபெற்றது.

அதன் பின்னர் உற்சவ மூர்த்திகளான ஆண்டாள் சமேத பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்று பூணூல் அணிவிக்கப்பட்டது.

திருக்கல்யாணத்தின் போது கேட்டவரம் தரும் தாயார் ஆண்டாள் சமேத பெருமாளிடம் ஆண், பெண் பக்தர்கள் ஏராளமான கோரிக்கைகளை வைத்து வழிபாடு செய்து பிரசாதம் பெற்று சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com