புல்மேட்டில் ஐயப்பப் பக்தா்கள் மகரஜோதி தரிசனம்: அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

மகரஜோதி, தமிழக-கேரள எல்லைப் பகுதியான இடுக்கி மாவட்டம், புல்மேடு மலையில் மகரஜோதி தரிசனம் செய்ய இடுக்கி மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் தயார்நிலையில் வைத்துள்ளது. 
புல்மேட்டிற்கு வருகை தந்து ஆய்வில் ஈடுபட்டுள்ள இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜ்
புல்மேட்டிற்கு வருகை தந்து ஆய்வில் ஈடுபட்டுள்ள இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜ்

கம்பம்: கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மகரவிளக்கு பூஜை நடைபெறும். இந்த மகரஜோதி, தமிழக-கேரள எல்லைப் பகுதியான இடுக்கி மாவட்டம், புல்மேடு மலையில் மகரஜோதி தரிசனம் செய்ய இடுக்கி மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் தயார்நிலையில் வைத்துள்ளது. 

குமுளி அருகே உள்ள புல்மேட்டிலிருந்து பார்த்தால் சபரிமலை சந்நிதானம் தெரியும், அதன் அருகில் உள்ள மலையில் தான் மகர ஜோதி தெரியும்.

இந்த மகரஜோதியை புல்மேடு, சத்திரம், வல்லக்கடவு மலை, சதுரங்கப் பாறை, பருந்துப் பாறை, பாஞ்சாலி மேடு உள்ளிட்ட பகுதிகளில் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். அவர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்வதற்காக  சனிக்கிழமை இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜ் புல்மேட்டிற்கு வருகை தந்தார்.

குமுளியிலிருந்து புல்மேடுக்கு 65 கேரள அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.காலை முதல் மதியம் 2 மணிவரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பாதுகாப்புப் பணியில் 1,500 காவலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். மருத்துவ முகாம்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்டவைகள் தயார் நிலையில் வைக்க உத்தரவிட்டார். ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிவரை மட்டுமே புல்மேடு பகுதிக்கு ஐயப்ப பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புல்மேட்டில் கடந்த 2009-ஆம் ஆண்டு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 100-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததன் காரணமாக, தற்போது இந்தப் பகுதியில் குறைந்த அளவிலான பக்தா்களே அனுமதிக்கப்படுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com