மகர விளக்கு பூஜை: சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரயில்

மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரி மலை செல்பவர்களுக்காக சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரி மலை செல்பவர்களுக்காக சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கொல்லத்தில் இருந்து ஜனவரி 16 ஆம் தேதி காலை 3 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், இரவு 9 மணிக்கு சென்னை வந்தடையும்.

அதேபோல் மறுவழித்திடத்தில், சென்னை எழும்பூரில் இருந்து ஜனவரி 16 ஆம் தேதி இரவு 11.45-க்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் மறுநாள்(ஜன. 17)  கொல்லம் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக இயக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com