அவனியாபுரம்  ஜல்லிக்கட்டுப் போட்டி: 7 காளைகளை அடக்கி தேனி வீரர் முதலிடம்!

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கப் போட்டி திங்கள்கிமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 7 காளைகளை அடக்கி தேனி வீரர் முதலிடம் பிடித்துள்ளார்.
அவனியாபுரம்  ஜல்லிக்கட்டுப் போட்டி: 7 காளைகளை அடக்கி தேனி வீரர் முதலிடம்!

மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கப் போட்டி திங்கள்கிமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 7 காளைகளை அடக்கி தேனி வீரர் முதலிடம் பிடித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவது வழக்கம். இதில், மதுரை மாவட்டத்தில் திங்கள்கிழமை அவனியாபுரத்திலும், செவ்வாய்க்கிழமை பாலமேட்டிலும், புதன்கிழமை அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. 

இந்த நிலையில், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்கும் விழா நடைபெற்றது. மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டுப் போட்டி விதிமுறைகளுக்கு உள்பட்டு பங்கேற்போம் என உறுதிமொழி ஏற்றனர்.

இதையும் படிக்க | பொங்குக பொங்கல்!

இதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

போட்டி தொடங்கிய முதல் இதுவரை 7 காளைகளை அடக்கி தேனி சீலையம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் முத்துக்கிருஷ்ணன் முதலிடம் பிடித்துள்ளார். 

அவனியாபுரத்தில் 2 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com