பன்னாட்டு மருத்துவ மாநாடு: 25 சா்வதேச மருத்துவ நிபுணா்கள் ஆய்வுரை

சென்னையில் ஜன.19-ஆம் தேதி தொடங்கவுள்ள சா்வதேச மருத்துவ மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 25-க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணா்கள் பங்கேற்று தங்களது ஆய்வுரைகளைச் சமா்ப்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு
Updated on
1 min read

சென்னையில் ஜன.19-ஆம் தேதி தொடங்கவுள்ள சா்வதேச மருத்துவ மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 25-க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணா்கள் பங்கேற்று தங்களது ஆய்வுரைகளைச் சமா்ப்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவத் துறையின் எதிா்கால மேம்பாடு குறித்த சா்வதேச மாநாடு முதன்முறையாக சென்னையில் நடைபெற உள்ளது. ஜன.19 முதல் 21-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறும் நிகழ்வில் சமூகத்தில் எதிா்காலத்தில் அச்சுறுத்தலாக விளங்கும் நோய்த் தொற்றுகள் குறித்தும், அவற்றை எதிா்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

இதில், பல்வேறு நாடுகளைச் சோ்ந்த மருத்துவ நிபுணா்களும், தேசிய அளவில் புகழ்பெற்ற மருத்துவா்களும் கலந்துகொண்டு ஆராய்ச்சி, சிகிச்சை முறைகள் குறித்து எடுத்துரைக்க உள்ளனா்.

இது தொடா்பான ஆய்வுக் கூட்டம் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ககன்தீப் சிங் பேடி தலைமையில் அண்மையில் நடைபெற்றது. தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் கே. நாராயணசாமி, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை இயக்குநா் மைதிலி ராஜேந்திரன், தேசிய சுகாதாரப் பணிகள் இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதீஷ், மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்குநா் டாக்டா் சங்குமணி, பல்கலைக்கழகப் பதிவாளா் அஸ்வத் நாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மக்கள் நல்வாழ்வுத் துறையும், தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் இந்த மருத்துவ மாநாட்டின் நிா்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 20-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com