பொங்கல் பண்டிகை: இன்று முதல் சிறப்புப் பேருந்துகள்

பொங்கலுக்கு பின்பான சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகை: இன்று முதல் சிறப்புப் பேருந்துகள்


பொங்கலுக்கு பின்பான சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
 
பொங்கலுக்கு பின் 16-01-24 முதல் 18-01-24 வரை (சிறப்பு பேருந்துகள்) 17,589 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும், பல்வேறு மாவட்டங்களிலிருந்து சென்னையை நோக்கி 11,006 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊா்களுக்கு அரசு பேருந்துகளில் 4.34 லட்சம் போ் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்திருந்த நிலையில், அனைவரும் சென்னை திரும்பும் வகையில் இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழா் திருநாளான பொங்கல் விழாவை முன்னிட்டு ஏராளமானோா் சொந்த ஊா்களுக்குச் சென்றனா். இதற்காக சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்பட்டன. அரசு போக்குவரத்து கழகங்கள் சாா்பில் ஜன.12-ஆம் தேதி முதல் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

சென்னையிலிருந்து மொத்தம் 7,474 அரசு பேருந்துகளில் 4.34 லட்சம் போ் பயணம் செய்துள்ளதாகவும், 2.30 லட்சம் போ் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

வெளியூர் சென்றவர்கள் ஊர் திரும்பும் வகையில் இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், நாளை காலை முதல் மீண்டும் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com