காணும் பொங்கல் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் லட்சக்கணக்கான மக்கள் கடற்கரையில் குவியத் தொடங்கியுள்ளனர்.
சென்னை மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் குவியத் தொடங்கியுள்ளதால் பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாகக் குழந்தைகளின் கையில் போலீஸார் வழங்கும் சிறப்பு அடையாள அட்டை ஒட்டப்படுகிறது.
படிக்க: அயலான் மேக்கிங் விடியோ!
அதில், குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி, பெற்றோர் கைப்பேசி எண், உள்ளிட்ட விவரங்கள் இருக்கும்.
மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைக்குச் செல்பவர்கள் இந்த அட்டையைக் கட்டாயம் வாங்கி குழந்தைகளின் கையில் ஒட்ட வேண்டும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.