உக்கம்பெரும்பாக்கம் நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் 108 கோ பூஜை

காஞ்சிபுரம் அடுத்த உக்கம்பெரும்பாக்கம் அருள்மிகு நட்சத்திர விருட்ச விநாயகர் திருக்கோயில் 108 கோ பூஜை விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு பூஜை செய்து வழிபட்டனர்.
உக்கம்பெரும்பாக்கம் நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் 108 கோ பூஜை


காஞ்சிபுரம் அடுத்த உக்கம்பெரும்பாக்கம் அருள்மிகு நட்சத்திர விருட்ச விநாயகர் திருக்கோயில் 108 கோ பூஜை விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டு பூஜை செய்து வழிபட்டனர்.

காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் ஊக்கம் பெரும்பாக்கம் கிராமத்தில் அருள்மிகு நட்சத்திர விருட்ச விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இங்கு 28 நட்சத்திர தேவதைகளுக்கு திருகற்சிலைகள் அமைக்கப்பட்டு அதற்குரிய நட்சத்திரவிருட்ச மரங்களும் அமைந்துள்ளது.

இங்கு வருடம் தோறும் விழா பொங்கல் விழா காலங்களில் 108 கோ பூஜை விழா வெகு விமர்சையாக நடைபெறும்.

அவ்வகையில் இன்று உலக நன்மை கருதியும் குடும்ப நன்மை இல்லத்தில் பெருக வேண்டியம், சகல ஐஸ்வர்யங்களும் பெரும் வகையில் மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்க வேண்டி 108 கோ பூஜை விழா திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

காலை 6:30 மணிக்கு விநாயகர் வள்ளி தேவசேன சமையலில் சிவசுப்பிரமணியர் மற்றும் 27 நட்சத்திர அதிதேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் வள்ளி,  தேவசேனா சமேத சுப்பிரமணியர், ருத்ராட்ச லிங்கேஸ்வரர் பெண்கள் ஏராளமாணோர் கலந்துகொண்டு பசுவிற்கு பூஜை மேற்கொண்டு தீபாராதனை செய்து குடும்பத்துடன் வழிபட்டனர்.

இதனை தொடர்ந்து மாலை அரசு - வேம்பு திருக்கல்யாணம் திருக்கோயில் வளாகத்தில் நடைபெறவுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com