சேலம் மாநாட்டில் பிரம்மாண்ட ட்ரோன் ஷோ: அமைச்சர் கே.என். நேரு

சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டில் 1500 டிரோன்கள் பங்கேற்புடன் பிரம்மாண்ட ட்ரோன் ஷோ நடைபெறவுள்ளதாக அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சேலம் அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் திமுக இளைஞரணி இரண்டாவது மாநாட்டின் முன்னேற்பாடு பணிகளை பார்வையிடும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு.
சேலம் அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் திமுக இளைஞரணி இரண்டாவது மாநாட்டின் முன்னேற்பாடு பணிகளை பார்வையிடும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு.

சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டில் 1500 டிரோன்கள் பங்கேற்புடன் பிரம்மாண்ட ட்ரோன் ஷோ நடைபெறவுள்ளதாக திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

திமுக இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு நாளை மறுநாள் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் மிக பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளது. மாநாடு ஏற்பாடுகள் குறித்து திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு சேலத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மாநாட்டுப் பந்தலில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் அமரும் வகையில் நாற்காலிகள் போடப்பட உள்ளதாகவும், மாநாட்டின் பந்தலின் உள்ளே இரண்டரை லட்சம் பேரும், மாநாடு சுற்றியுள்ள இடங்களில் 2.5 லட்சம் பேரும் என ஐந்து லட்சம் பேர் பங்கேற்பதற்கு தேவையான ஏற்பாடுகள் மற்றும் வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாக கூறினார்.

மாநாட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் முறையில் ஒருங்கிணைக்கப்பட்டு அதற்கான பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், மாநாட்டிற்கு வரும் அனைவருக்கும் மதியம் உணவு வழங்கிட தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் மாநாட்டு திடலில் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக கூறினார்.

சேலம் திமுக இளைஞரரை மாநாட்டில் பங்கேற்பதற்காக திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் நாளை மாலை 5 மணிக்கு விமானத்தில் சேலம் வருகை தர உள்ளதாக குறிப்பிட்ட அவர், அங்கிருந்து மாநாட்டு பந்தலுக்கு வருகை தரும் முதல்வர் சென்னையில் இருந்து கொண்டுவரப்பட்ட சுடரை ஏற்றி வைக்க உள்ளதாகவும், நீட் தேர்வு ஒழிப்புக்காக நடைபெற்று வரும் இருசக்கர வாகன பேரணியையும் முதலமைச்சர் பார்வையிட உள்ளதாகவும் கூறினார்.

இதனை அடுத்து 1500 டிரோன்கள் பங்கேற்புடன் பிரம்மாண்ட ட்ரோன் ஷோ முதலமைச்சர் முன்னிலையில் நடக்க உள்ளதாகவும் அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்

ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் முதலமைச்சர் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி கொடியேற்றி வைக்க உள்ளதாகவும், மாநாட்டு பந்தலை மாணவர் அணி செயலாளர் எழிலரசன் திறந்து வைக்க உள்ளதாகவும் குறிப்பிட்ட அமைச்சர் கே.என். நேரு மாநாட்டினையொட்டி முக்கிய தலைவர்களின் சிலைகள் திறக்கப்பட உள்ளதாகவும் கூறினார்

மாநாடு இளைஞரணி செயலாளர் மாநாட்டு தீர்மானங்களை முன்மொழிவதுடன் தொடங்குவதாகவும், மாநாட்டின் தீர்மானங்கள் குறித்து 20க்கும் மேற்பட்ட திமுக முன்னணி தலைவர்கள் பேச உள்ளதாகவும் அமைச்சர் கே.என். நேரு குறிப்பிட்டார்.

இளைஞரணி செயலாளர் உரைக்கு பின்னர் முதலமைச்சர் மாநாட்டு சிறப்புரை ஆற்ற உள்ளதாகவும், நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த மாநாடாக சேலம் திமுக இளைஞர் அணி மாநாடு அமையும் என்றும் அமைச்சர் கே.என். நேரு நம்பிக்கை தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பின்போது திமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், டி.எம். செல்வகணபதி ராஜேந்திரன் எம்எல்ஏ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com