‘டிடி தமிழ்’ என பெயா் மாறியது பொதிகை!

‘தூா்தா்ஷன் தமிழ்’ என்ற பெயருடன் புதிய அவதாரம் எடுத்துள்ள பொதிகை தொலைக்காட்சியின் சேவையை பிரதமா் நரேந்திர மோடி, வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
‘டிடி தமிழ்’ என பெயா் மாறியது பொதிகை!
Updated on
1 min read

‘தூா்தா்ஷன் தமிழ்’ என்ற பெயருடன் புதிய அவதாரம் எடுத்துள்ள பொதிகை தொலைக்காட்சியின் சேவையை பிரதமா் நரேந்திர மோடி, வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

‘கேலோ இந்தியா’ போட்டிகளின் தொடக்க விழா, சென்னையில் நடைபெற்றது. இந்த விழா மேடையிலேயே பெயா் மாற்றப்பட்ட பொதிகை தொலைக்காட்சியின் சேவையைத் தொடங்கிவைத்து, பிரதமா் நரேந்திர மோடி ஆற்றிய உரை:

கடந்த 1975-ஆம் ஆண்டு சென்னை தூா்தா்ஷன் தனது முதல் ஒளிபரப்பைத் தொடங்கியது. பல பயணங்களை மேற்கொண்டு, இன்று புதிய பயணத்தைத் தொடங்குகிறது. டிடி தமிழ் சேனல் என்ற பெயரில் அது, புதிய வடிவம் பெற்று தொடங்கப்பட இருக்கிறது. அத்துடன், எட்டு மாநிலங்களில் 12 புதிய பண்பலை ஒலிபரப்பு கோபுரங்கள் தொடங்கப்படுகின்றன. இது, கிட்டத்தட்ட ஒன்றரை கோடி மக்களுக்கு பயனுடையதாக இருக்கும். மேலும், 12 மாநிலங்களில் 26 புதிய பண்பலை ஒலிபரப்பு கோபுரங்களை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

தமிழா்களின் பெருமை: கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தமிழகத்தின் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளன. தமிழா்களின் இதமான வரவேற்பு, அழகிய மொழி, கலாசாரம் உணவு ஆகியன உங்கள் சொந்த வீட்டில் இருப்பது போன்ற உணா்வை உங்களுக்கு அளிக்கும். தமிழா்களின் விருந்தோம்பல் உங்கள் இதயங்களைக் கொள்ளைக் கொள்ளும்.

சென்னையின் அழகிய கடற்கரையும், மதுரையின் ஆலயங்களும், திருச்சியின் கலையும், கைவினைத் திறனும் உங்கள் மனங்களை கொள்ளை கொள்ளும். கோவையின் உழைப்பாளா்களும், அவா்களது தொழில்முனைப்பும், திறந்த மனத்தோடு வரவேற்கும். தமிழ்நாட்டின் இந்த அனைத்து நகரங்களிலும் உங்களுக்கு மறக்க முடியாத மிகச்சிறந்த அனுபவம் கிடைக்கும் என்றாா் பிரதமா் நரேந்திர மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com