தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

சிதம்பரம் அருகே படகு கவிழ்ந்து மீனவர் பலி! 

சிதம்பரம் அருகே கிள்ளை வெள்ளாற்று முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்த விபத்தில், மாயமான மீனவரின் உடல் சனிக்கிழமை கரை ஒதுங்கியது.

News image
Updated On :20 ஜனவரி 2024, 7:57 am

சிதம்பரம்: சிதம்பரம் அருகே கிள்ளை வெள்ளாற்று முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்த விபத்தில், மாயமான மீனவரின் உடல் சனிக்கிழமை கரை ஒதுங்கியது.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம் சின்ன வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த மீனவசெல்வன்(51), கிள்ளை பகுதியைச் சேர்ந்த தயாளமூர்த்தி  (55) ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனா். இருவரும் சனிக்கிழமை அதிகாலை மீண்டும் கரைக்கு திரும்பி வந்த போது, வெள்ளாற்று முகத்துவாரத்தில் திடீரென படகு சிக்கி கவிழ்ந்தது.

இதில், மாயமான மீனவசெல்வன் உடல் சனிக்கிழமை கரை ஒதுங்கியது.

இந்தநிலையில், மாயமான மற்றொருவரான மீனவரான தயாளமூர்த்தியை சின்ன வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் தேடி வருகின்றனர்.

மேலும் முகத்துவாரம் தூர்வாரப்படாததால் கடந்த 15 நாள்களில் மூன்று மீனவர்கள் இறந்துள்ளதால் முகத்துவாரத்தை உடனே ஆழப்படுத்தக் கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.