திமுக இளைஞரணி மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் 25 தீர்மானங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிறைவேற்றினார். 
திமுக இளைஞரணி மாநாட்டில் தீர்மானங்களை படிக்கும் திமுக இளைஞரணி செயலரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்.
திமுக இளைஞரணி மாநாட்டில் தீர்மானங்களை படிக்கும் திமுக இளைஞரணி செயலரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்.
Published on
Updated on
2 min read

சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் 25 தீர்மானங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிறைவேற்றினார். 

திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில்,   அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 25 தீர்மானங்களை நிறைவேற்றினார்.

தி.மு.க. இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தீர்மானம் 1

இளைஞர் அணியின் மாநில மாநாட்டிற்கு அனுமதியளித்த ஜனநாயகப் பாதுகாவலர் கழகத் தலைவர் அவர்களுக்கு நன்றி!

திமுகத் தலைவர்-தமிழ்நாடு முதலமைச்சர், கடந்த பத்தாண்டு கால மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சியில் பறிக்கப்பட்ட, தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் ஜனநாயகப் பாதுகாவலராகத் திகழ்ந்து வரும் நிலையில், தன்னால் வளர்த்தெடுக்கப்பட்ட இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு அனுமதி தந்து, அதனை மாநில உரிமை மீட்பு முழக்கமாக முன்னெடுக்கச் செய்த இளைஞர் அணியின் தாயுமானவரான திமுகத் தலைவர்- தமிழ்நாடு முதலமைச்சருக்கு இந்த மாநாடு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2

தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்க அயராது பாடுபடும் முதலமைச்சருக்கு இளைஞர் அணி என்றும் துணை நிற்கும்!

தீர்மானம் 3

மகளிர் வாழ்வில் தன்னம்பிக்கையை வளர்க்கும் விடியல் பயணம்!

திமுகத் தலைவர் முதலமைச்சரின் தலைமையிலான  திட்டங்கள் பலவும் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும், தமிழ்நாட்டின் அடியொற்றி, பல மாநிலங்கள் பின்பற்றுகிற வகையிலும் புகழ் பெற்றுள்ளன. முதலமைச்சராகப் பொறுப்பேற்று, தலைமைச் செயலகத்திற்குச் சென்றவுடனேயே மகளிருக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம் என்ற மகத்தானத் திட்டத்திற்குக் கையெழுத்திட்டார் 

தீர்மானம் 4

குடும்பத் தலைவியரின் உழைப்பை மதிக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்!

தீர்மானம் 5

மாணவர்களின் உடல் நலன் காத்து ஊக்கமளிக்கும் காலை உணவுத் திட்டம்!

தீர்மானம் 6

நாளைய தலைமுறையை வளர்த்தெடுக்கும் நான் முதல்வன் - புதுமைப் பெண் திட்டங்கள்!

தீர்மானம் 7

மக்களின் உயிர்காக்கும் மருத்துவத் திட்டங்கள்!

தீர்மானம் 8

நிதி நெருக்கடியிலும் மகிழ்ச்சிப் பொங்க வைத்த பொங்கல் பரிசுத் தொகுப்பு!

தீர்மானம் 9

வரலாறு காணாத மழையிலும் மக்களைக் காத்த முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி!

தீர்மானம் 10

நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞரின் இலட்சிய வழி நடப்போம்!

தீர்மானம் 11

தமிழ்நாட்டை முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக்கிய முதலமைச்சர்!

தீர்மானம் 12

இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக தமிழ்நாட்டை மாற்றிவரும் மாண்புமிகு அமைச்சர்

தீர்மானம் 13

உயிர்பலி நீட் நுழைவுத் தேர்வை ஒழிக்கும் வரை போராட்டம் ஓயாது!

தீர்மானம் 14

குலக்கல்வி முறையைப் புகுத்தும் தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்துப் போராட்டம்

தீர்மானம் 15

மாநிலப் பட்டியலுக்குக் கல்வி-மருத்துவத்தை மாற்றுக!

தீர்மானம் 16

முதலமைச்சரே பல்கலைக்கழக வேந்தர்

தீர்மானம் 17

ஆளுநர் பதவியை நிரந்தரமாக அகற்றிடுக!

தீர்மானம் 18

தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு வேலைகளில் தமிழர்களை நியமித்திடு

தீர்மானம் 19

மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிக்கும்  மத்திய அரசுக்குக் கண்டனம்

தீர்மானம் 20

கலைஞரின் மாநில சுயாட்சித் தீர்மானத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கிடுக!

தீர்மானம் 21

அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளைக் கைப்பாவையாக்கிய மத்திய பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்!

தீர்மானம் 22

நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் சர்வாதிகாரத்தை ஒழித்திடுவோம்!

தீர்மானம் 23

இந்துக்களின் உண்மையான எதிரி பா.ஜ.க.தான் என்பதை அம்பலப்படுத்துவோம்.

தீர்மானம் 24

பா.ஜ.க ஆட்சியை வீழ்த்திடும் முன்கள வீரர்களாக இளைஞர் அணி செயல்படும்!

தீர்மானம் 25

நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான சூளுரை

சமூக நீதி - மத நல்லிணக்கம்-சமத்துவம்-மாநிலங்களின் உரிமைகள்-தாய்மொழி வளர்ச்சி, பரவலான பொருளாதாரக் கட்டமைப்பு, மனித உரிமை இவற்றைக் கொள்கைகளாகக் கொண்ட இயக்கங்களின் ஒருங்கிணைப்பான ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்குவதிலும், வழிகாட்டுவதிலும் முன்னணி பங்காற்றி வருபவரும், மனிதநேய சக்திகளை ஒன்றிணைத்தால், பாசிசத்தை வீழ்த்திக் காட்ட முடியும் என 2019 நாடாளுமன்றத் தேர்தலிலேயே தமிழ்நாட்டில் வெற்றிகரமாக நிரூபித்துக் காட்டியவருமான முதலமைச்சர்-திமுகத் தலைவரின் வழிகாட்டுதலில், இயங்கும் திமுக இளைஞர் அணி, திமுகத் தலைவரின் கட்டளைக்கேற்ப 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் முன்னின்று செயலாற்றி, தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து, ‘ஹிட்லர்களின் தோல்வி ஸ்டாலினிடம்தான்’ என்ற வரலாற்று மரபின் தொடர்ச்சியை நிரூபிக்கும் வகையில், இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டும் எனச் சூளுரைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com