காவல்துறையை தவறாக பயன்படுத்தும் தமிழக அரசு: நிர்மலா சீதாராமன்

தமிழக காவல்துறையை தமிழக அரசு தவறாக பயன்படுத்துகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

தமிழக காவல்துறையை தமிழக அரசு தவறாக பயன்படுத்துகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

காஞ்சிபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மீது உள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை இந்நிகழ்வில் தமிழக அரசு காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அயோத்தியில் இன்று ராமர் கோவில் சிலை பிரதிஷ்டை விழா நடைபெறும் நிலையில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மாள் ஆலய வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஏற்பாடு வளாகத்தில் பஜனை நிகழ்ச்சிகள் நடைபெறுவதை ஒளிபரப்பு செய்ய எல் இ டி டிவி அமைக்கப்பட்டது. ஏற்கனவே தனியார் அரங்கில் நடைபெற இருந்த நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் இங்கு நடைபெறும் நிலையில் இங்கும் இந்த ஒளித்திரையை அகற்ற  காவல்துறை அறிவுறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் நிகழ்ச்சிக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக அரசு தமிழக காவல்துறையை தவறாக நடத்துகிறது எனவும், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை தமிழக அரசு இந்நிகழ்வில் பயன்படுத்திக் கொள்கிறது எனவும் இதை அனைத்தையும் பிரதமர் மோடி உள்ளிட்ட அனைவரும் பார்த்துக் கொண்டிருப்பதாக கடுமையாகக் குற்றம்சாட்டினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com