கிளாம்பாக்கம் அருகே புதிய ரயில் நிலையத்துக்கான பணிகள் தொடக்கம்

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்துக்கு அருகே புதிதாகக் கட்டப்படவிருக்கும் ரயில் நிலையத்துக்கான பணிகள் தொடங்கியுள்ளன.
கிளாம்பாக்கம் அருகே புதிய ரயில் நிலையத்துக்கான பணிகள் தொடக்கம்


சென்னை: சென்னை அடுத்த கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்துக்கு அருகே புதிதாகக் கட்டப்படவிருக்கும் ரயில் நிலையத்துக்கான பணிகள் தொடங்கியுள்ளன.

கிளாம்பாக்கத்தில் இருந்து நகருக்குள் வரும் பயணிகளின் வசதிக்காக பேருந்து நிலையம் அருகே புறநகர் ரயில் நிலையம் அமைக்க தமிழக அரசு தரப்பில் தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ரயில்வே நிதி கிடைத்து ரயில் நிலையம் அமைக்க காலதாமதம் ஏற்படும் என்பதால் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும நிதியிலிருந்து முதல்கட்டமாக தெற்கு ரயில்வேக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

இந்தாண்டு இறுதிக்குள் கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகளை முடிக்க தெற்கு ரயில்வேக்கு கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ரயில் நிலையமானது 3 நடைமேடை கொண்டதாகவும், ஒவ்வொரு நடைமேடையும் 12 ரயில் பெட்டிகள் நிற்கும் வகையில் வசதி கொண்டதாக அமைக்கப்படவிருக்கிறது.

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் ரயில்கள், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். இந்த புதிய ரயில் நிலையத்தால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ரயில் நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு நடைமேம்பாலம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com