உடல்நலக் குறைவால் காலமான இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணியின் மறைவுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி (47) உடல் நலக் குறைவால் இன்று (ஜனவரி 25) காலமானார்.
அவரது மறைவுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் கூறியிருப்பதாவது: இசைஞானி இளையராஜா அவர்களின் மகளும், திரைப்பட பின்னணி பாடகியுமான, திருமதி.பவதாரணி அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி..! எனப் பதிவிட்டுள்ளார்.