கூடலூரில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கூடலூர் நகர்ப்புறத்தில் மூன்று நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
நீரேற்று நிலையத்தைப் பார்வையிடும் அலுவலர்கள் மற்றும் நகர்மன்ற தலைவர்
நீரேற்று நிலையத்தைப் பார்வையிடும் அலுவலர்கள் மற்றும் நகர்மன்ற தலைவர்
Updated on
1 min read

கம்பம்:  தேனி மாவட்டம் கூடலூர் நகர் பகுதிக்கு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக ஆணையாளர் கே.எஸ்.காஞ்சனா தெரிவித்துள்ளார்.

கூடலூர் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன, இவற்றில் 20 வார்டுகளுக்கு குடிநீர் விநியோகம் லோயர்கேம்ப்பில் உள்ள நீரேற்று நிலையத்தில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்ததால் குடிநீர் விநியோகம் செய்யும் நீரேற்று நிலையத்தில் மணல் மேவி கிடந்தது. இதனால் நகரப்பகுதியில் உள்ள லோயர்கேம்ப்- ஒரு வார்டு தவிர மற்ற 20 வார்டுகளுக்கு குடிநீர் விநியோகம் தடைபட்டது.

இந்த நிலையில் நீரேற்று நிலையத்தில் சேர்ந்துள்ள மணலை அகற்றும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருவதால் வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com