கோவை - சென்னை, கன்னியாகுமரி - சென்னை இடையே நாளை (ஜன.28) சிறப்பு ரயில்கள்

கோவை - சென்னை, கன்னியாகுமரி - சென்னை இடையே நாளை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கன்னியாகுமரி மற்றும் கோவையிலிருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.28) இயக்கப்படுகிறது.

தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கன்னியாகுமரியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (ஜன.28) இரவு 8.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06041) மறுநாள் காலை 10 மணிக்கு எழும்பூா் வந்தடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06042) எழும்பூரிலிருந்து திங்கள்கிழமை (ஜன.29) பிற்பகல் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2.45 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும்.

இந்த ரயில் கன்னியாகுமரியிலிருந்து நாகா்கோவில், வள்ளியூா், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக எழும்பூா் வந்தடையும்.

இதற்கிடையே, கோவையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (ஜன.28) இரவு 23.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06043) மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06044) சென்ட்ரலிலிருந்து திங்கள்கிழமை (ஜன.29) பிற்பகல் 1.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.05 மணிக்கு கோவை சென்றடையும்.

இந்த ரயில் கோவையிலிருந்து திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா், வழியாக சென்ட்ரல் வந்தடையும்.

இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com