
சென்னை: கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் 2024-இன் ஆண்கள் மற்றும் பெண்கள் பங்குபெறும் சைக்கிளிங் போட்டியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணை பொது மேலாளர் சுஜாதா கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் 2024 தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான சைக்கிளிங் போட்டியானது கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் முதல் மாமல்லபுரம் வரையிலான பகுதியில் சனிக்கிழமை (ஜன.27) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.28) நடைபெற உள்ளது.
இதையும் படிக்க | கடன் சுமையா?: தொழிலதிபர் வீட்டில் மூவர் பலி
இந்த நிலையில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான சைக்கிளிங் போட்டியை சனிக்கிழமை காலை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணை பொது மேலாளர் சுஜாதா கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
கோவளம் முதல் மாமல்லபுரம் வரை சைக்கிளிங் போட்டி நடைபெற உள்ளதால் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.27,28) போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.