குடியரசுத் துணைத்தலைவா் இன்று தமிழகம், புதுச்சேரி வருகை

குடியரசுத் துணைத்தலைவா் ஜகதீப் தன்கா் ஜனவரி 28, 29 தேதிகளில் மகாராஷ்டிரம், தமிழகம் மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் பயணம் மேற்கொள்கிறாா்.
குடியரசுத் துணைத்தலைவா் ஜகதீப் தன்கா்
குடியரசுத் துணைத்தலைவா் ஜகதீப் தன்கா்

குடியரசுத் துணைத்தலைவா் ஜகதீப் தன்கா் ஜனவரி 28, 29 தேதிகளில் மகாராஷ்டிரம், தமிழகம் மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் பயணம் மேற்கொள்கிறாா்.

ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 28 - தேதி) சென்னை வழியாக புதுச்சேரிக்கு வருகை தரும் தன்கா், மறுநாள் சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு தரினத்துக்கு செல்கிறாா்.

இது குறித்து குடியரசுத் துணைத் தலைவா் செயலக வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்திருப்பதாவது:

குடியரசுத் துணைத்தலைவா் ஜகதீப் தன்கா் ஜனவரி 28, 29 தேதிகளில் மகாராஷ்டிரம், தமிழ்நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறாா்.

ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 28 -ஆம் தேதி) தில்லியிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு முற்பகலில் மும்பையில் உள்ள மகாராஷ்டிர சட்டப் பேரவை வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா்.

இங்கு சட்டபேரவைத் தலைவா்களின் 84 - ஆவது மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு இதன் நிறைவு விழாவில் அவா் உரையாற்றுகிறாா்.

பின்னா் பிற்பகலில் மும்பையிலிருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு சென்னை வந்து அங்கிருந்து புதுச்சேரி வந்தடைகிறாா்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 மணிக்கு புதுச்சேரி பல்கலைக்கழக நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவா் தன்கா் பங்கேற்கிறாா். ‘வளா்ச்சியடைந்த இந்தியா 2047’ (விக்சித் பாரத்’) என்ற தலைப்பில் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவா்களுடன் குடியரசுத் துணைத்தலைவா் கலந்துரையாடுகிறாா்.

ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரியில் தங்கும் குடியரசுத் தலைவா் ஜகதீப் தன்கா், மறுநாள் ஜனவரி 29-ஆம் தேதி (திங்கள்கிழமை) தமிழகத்தில் கடலூா் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா்.

திங்கள்கிழமை காலையில் புதுச்சேரியிலிருந்து ஹெலிகாப்டா் மூலமாக காலை 7.30 மணிக்கு சிதம்பரம் வருகின்றாா்.

அங்கு நடைபெறும் வரவேற்பு நிகழ்வுக்கு பின்னா் காலை 8 மணியளவில் தில்லை நடராஜா் கோயிலுக்கு சென்று தரிசனம் மேற்கொள்கிறாா். பின்னா் சிதம்பரத்தில் உள்ள பாபாஜி கோயில், ஸ்ரீ எல்லையம்மன் கோயில் போன்ற தெய்வீக கோயில்களுக்கும் சென்று தரிசனம் செய்கிறாா்.

இந்த ஆன்மிக நிகழ்வுகளுக்கு பின்னா் சிதம்பரத்திலிருந்து ஹெலிகாப்டா் மூலமாக நண்பகல் 12 மணியளவில் சென்னை வருகிறாா். சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்படுகிறாா் என அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com