வலிகளைத் தாங்குவதற்கு இசை உதவுகிறது: பாடகர் அருணா சாய்ராம்

வலிகளைத் தாங்குவதற்கு இசை உதவுகிறது: பாடகர் அருணா சாய்ராம்

புகழ்பெற்ற பாடகர் அருணா சாய்ராம், தனது இசைப் பயணம் மற்றும் இசையின் சக்தி பற்றிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். 
Published on

சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் நடத்தப்பட்ட கல்விச் சிந்தனை அரங்கு ஜன. 24ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை இருநாள்கள் நடைபெற்றது.

இதில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வழங்கிய நிகழ்வில் கலந்து கொண்ட புகழ்பெற்ற பாடகர் அருணா சாய்ராம், தனது இசைப் பயணம் மற்றும் இசையின் சக்தி பற்றிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். 

மூத்த பத்திரிக்கையாளர் காவேரி பம்சாய் தலைமையில் "தெய்வீக குரல்" என்ற தலைப்பில் நடந்த அமர்வில், மனிதர்களின் உணர்வில் இசையின் தாக்கம் குறித்து அவர் பேசினார்.

அவர் பேசியதாவது, "தன்னிடமிருந்து தானே தப்பித்துக் கொள்வதற்கு இசை ஒரு ஆழமான வாய்ப்பை வழங்குகிறது. குறிப்பாக வாழ்க்கையின் வலிகள் நிறைந்த தருணங்களில் அதனைத் தாங்குவதற்கு இசை உதவுகிறது. ஒரு முறை நாம் வலியை தாங்கும் போது, ​​மனம் பலமுறை அதை மீண்டும் எதிர்கொள்ளும் சக்தியைப் பெறுகிறது. நம்மில் பலர் இதனை அனுபவித்திருக்கிறோம்.

இசை என்பது கிருஷ்ணரின் தெய்வீகப் பரிசு. நான் பாடிய பாடல்கள் எனதல்ல. அவற்றை நான் பாடவில்லை. கிருஷ்ணரே பாடுகிறார். இது எனக்கு கிடைத்த அன்பளிப்பு. நான் அதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.” என்று கூறினார்.

மேலும் இந்த அமர்வின் போது அருணா சாய்ராம், ​​"சண்முகப்ரியா ராகம்" மற்றும் "ஐகிரி நந்தினி" பாடல் உள்ளிட்டவற்றை பாடி பார்வையாளர்களுக்கு இசை விருந்தளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com