ஐஐஎம்கள் உலகளாவிய தேவைகளுக்கேற்ப மாறவேண்டும்

தற்போதைய உயர்கல்வி முறையை சீரமைக்க வேண்டியதன் அவசியத்தை ஐஐஎம் இயக்குநர்கள் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.
ஐஐஎம்கள் உலகளாவிய தேவைகளுக்கேற்ப மாறவேண்டும்


தற்போதைய உயர்கல்வி முறையை சீரமைக்க வேண்டியதன் அவசியத்தை இரண்டு முதன்மை இந்திய மேலாண்மை நிறுவனங்களின் (ஐஐஎம்கள்) இயக்குநர்களும் அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.

சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் நடத்தப்பட்ட கல்விச் சிந்தனை அரங்கு ஜன. 24ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை  இருநாள்கள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், திறன்களை கற்பது தொடர்பான தலைப்பில் பேசிய ஐஐஎம் கோழிக்கோடு இயக்குநர் டெபாஷிஸ் சாட்டர்ஜி மற்றும் ஐஐடி காரக்பூரின் இயக்குநர் விகே திவாரி ஆகியோர் தற்போதைய கல்வி முறையை சீரமைக்க வேண்டிய அவசரத்தை சுட்டிக் காட்டினார்கள்.

மூத்த பத்திரிக்கையாளர் காவேரி பம்சாய் தலைமையில், "கற்றல் மென் திறன்கள்: ஏன் பொறியாளர்கள் மேலாளர்களாக இருக்க வேண்டும்" என்ற தலைப்பில் பேசிய சாட்டர்ஜி, அறுபது ஆண்டுகளுக்கும் மேல் நீடித்து வரும் ஐஐஎம்களின் வெற்றிகரமான மரபுக்கு மறுகட்டமைப்பு மற்றும் மறுசீரமைப்பு தேவை என்று வலியுறுத்தினார். வளர்ந்து வரும் உலகளாவிய போக்குகளுடன் ஒத்துப்போகும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

"முழு கட்டமைப்பையும் மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். 60 ஆண்டுகால ஐஐஎம்களின் வெற்றிகரமான பாரம்பரியத்தை வழிநடத்துவதில் சவால் உள்ளது என்றும் தெபாஷிஸ் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
கற்றலில் முன்னுதாரண மாற்றத்தைப் பற்றி பேசுகையில், விகே திவாரி, இன்றைய மாணவர்கள் எதிர்கொள்ளும் கடுமையான போட்டியைக் குறிப்பிட்டு பேசினார்.

அதாவது, ஜேஇஇ நுழைவுத் தேர்வில் ஏற்பட்ட மாற்றங்களை அவர் இங்கே குறிப்பிட்டார். அதாவது,

"நான் ஜேஇஇ எழுதியபோது, ​​தோராயமாக 80,000 பேர் கலந்துகொண்டனர், தோராயமாக 2,700 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது, ​​13 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் ஜேஇஇ எழுதும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அவர்களில், சுமார் 1.75 லட்சம் பேர் அடுத்த கட்டத்திற்குச் செல்கின்றனர், அவர்களில் 64,000 பேர் தகுதி பெறுகிறார்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com