சிறப்பாக செயல்பட்டால் தரவரிசையில் இடம்பெறலாம்: ஐஐடி இயக்குநர் காமகோடி

சிறப்பாக செயல்பட்டால் தரவரிசையில் தானாக இடம்பெறலாம் என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்தார்.
சிறப்பாக செயல்பட்டால் தரவரிசையில் இடம்பெறலாம்: ஐஐடி இயக்குநர் காமகோடி
Published on
Updated on
1 min read

சிறப்பாக செயல்பட்டால் தரவரிசையில் தானாக இடம்பெறலாம் என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்தார்.

சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் நடத்தப்பட்ட கல்விச் சிந்தனை அரங்கு ஜன. 24ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை இருநாள்கள் நடைபெற்றது.

கல்விச் சிந்தனை அரங்கில், தரவரிசை மற்றும் மதிப்பீடு என்ற தலைப்பில் இந்திய அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர் கோவிந்தன் ரங்கராஜன் மற்றும் ஐஐடி சென்னை இயக்குநர் காமக்கோடி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். 

கோவிந்தன் ரங்கராஜன் பேசியது:

“தரவரிசை மற்றும் மதிப்பீடுகள் வெவ்வேறு அம்சங்கள். உயர் மதிப்பீடு பெற்ற நிறுவனங்கள் எப்போதும் தரவரிசையில் முதலிடத்தில் இருக்காது. நிறுவனங்கள் சிறப்பாக செயல்படுவதில் கவனம் செலுத்த வேண்டும்.” என்றார். 

காமகோடி பேசியதாவது:

“நாங்கள் எங்கள் கடமைகளை செய்கிறோம். அதற்கான பலன் கிடைக்கிறது.  சில சமயங்களில் நன்றாக பணியாற்றினாலும், தரவரிசையில் குறைவான இடங்களை பெற நேரிடும்.

தரவரிசை மற்றும் மதிப்பீடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து உழைக்க வேண்டும். தரவரிசை, மதிப்பீடுகள் தானாக உருவாகும்.” எனத் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com