‘தொலைக்காட்சியில் மக்கள் பிரச்னையை விவாதிக்க வேண்டும்’

‘தொலைக்காட்சியில் மக்கள் பிரச்னையை விவாதிக்க வேண்டும்’

தொலைக்காட்சியில் மக்கள் தொடர்புடைய பிரச்னைகளை விவாதிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
Published on

தொலைக்காட்சியில் மக்கள் தொடர்புடைய பிரச்னைகளை விவாதிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் நடத்தப்பட்ட கல்விச் சிந்தனை அரங்கு ஜன. 24ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை இருநாள்கள் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தொலைக்காட்சி விவாதங்கள் குறித்து திமுக, அதிமுக, காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளின் செய்தித் தொடர்பாளர்கள் கலந்து கொண்டு பேசினர்.

திமுகவின் செய்தித் தொடர்பாளர் தரணிதரன் செல்வம் பேசியது:

“மக்கள் பிரச்னைகளில் செய்தித் தொலைக்காட்சிகள் கவனம் செலுத்த வேண்டும். பொழுதுபோக்காக அல்லாமல் அறிவுப்பூர்வமாக நிகழ்ச்சிகள் இருக்க வேண்டும்.” 

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஐஸ்வர்யா மகாதேவ் பேசியது:

“நாட்டில் நிலவும் பணவீக்கம்,  மனித உரிமை தொடர்பான பிரச்னைகளை விவாதிக்க பலர் விரும்புகின்றனர். ஆனால், தொலைக்காட்சிகள் பரபரப்பான செய்திகள், குறிப்பிட்ட வழிபாட்டு தலங்கள் தொடர்பான விவாதங்களை மட்டுமே நடத்துகின்றனர்.”

பாஜக துணைத் தலைவர் நாராயண் திருப்பதி பேசியது:

“தமிழ் தொலைக்காட்சிகளின் சமமான பிரதிநிதித்துவம் இல்லை. இரு தரப்பினருக்கும் விவாதிக்க சமமான நேரம் வழங்கப்பட வேண்டும். எங்களுக்கு பேச வாய்ப்பு கொடுக்கவில்லையெனில், விவாதங்களில் பங்கேற்பதில் பலனில்லை.” 

அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் பேசியது:

“தமிழக தொலைக்காட்சி விவாதங்களில் திமுகவின் தலையீடு அதிகளவில் உள்ளது. தொலைக்காட்சி நிறுவனத்தில் திமுகவின் ஆட்கள் உள்ளனர். நிறுவனத்தால் சுதந்திரமாக விவாதத்திற்கான தலைப்பை தேர்ந்தெடுக்க முடிவதில்லை. தொலைக்காட்சி விவாதங்கள் நிகழ்ச்சியோடு முடிந்துவிடும். சித்தாந்தம் தாண்டி தனிப்பட்ட விரோதம் இல்லை. இதுவே அரசியல் நாகரிகம்.” 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com