‘ஒவ்வொரு கல்லூரியிலும் மனநல ஆலோசகர் தேவை’

ஒவ்வொரு கல்லூரிகளிலும் மாணவர்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்கு மனநல ஆலோசகர் பணியமர்த்த வேண்டும் என்று மருத்துவர் மலையப்பன் தெரிவித்துள்ளார்.
‘ஒவ்வொரு கல்லூரியிலும் மனநல ஆலோசகர் தேவை’

ஒவ்வொரு கல்லூரிகளிலும் மாணவர்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்கு மனநல ஆலோசகர் பணியமர்த்த வேண்டும் என்று மருத்துவர் மலையப்பன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் நடத்தப்பட்ட கல்விச் சிந்தனை அரங்கு ஜன. 24ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை இருநாள்கள் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் தற்கொலை குறித்து மனநல மருத்துவர்கள் கலந்து கொண்டு பேசினர்.

மனநல மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் மருத்துவர் எம். மலையப்பன் பேசியது: 

“ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர்களின் பிரச்னைகளைத் தீர்க்க பயிற்சி பெற்ற ஆலோசகர் தேவை. மாணவர்களை மனிதநேயத்துடன் அணுக ஒவ்வொரு ஆசிரியரும் பயிற்சி பெற வேண்டும்.

வேலை பாதுகாப்பின்மை, சமூக மாற்றங்களைச் சமாளிக்க இயலாமை ஆகியவை தற்கொலைக்கான காரணங்கள். குழந்தைகள் வீட்டில் செல்லமாக வளர்க்கப்படுவதால் வெளியே தோல்விகளை எதிர்கொள்ள முடியவில்லை.” எனத் தெரிவித்தார்.

மேலும், மனநல ஆலோசகர் மருத்துவர் சரஸ் பாஸ்கர், “நண்பர்கள் மத்தியில் கேலி செய்யும்போது, எதிரில் உள்ளவர்கள் வருந்துகிறாரா என்பதை மாணவர்கள் கவனிக்க வேண்டும்.” எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com