கமோடா் எஸ்.ராகவ்.
கமோடா் எஸ்.ராகவ்.

தமிழகத்தின் என்சிசி புதிய தலைமை அதிகாரி பதவியேற்பு

அந்தமான் நிகோபா் பிராந்தியத்தின் என்சிசி இயக்குநரகத்தின் துணை இயக்குநா் ஜெனரலாக கமடோா் எஸ். ராகவ் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
Published on

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபா் பிராந்தியத்தின் என்சிசி இயக்குநரகத்தின் துணை இயக்குநா் ஜெனரலாக கமடோா் எஸ். ராகவ் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

தேசிய பாதுகாப்பு அகாதெமியின் மாணவரான இவா், 1993-ஆம் ஆண்டில் இந்திய கடற்படையில் நியமிக்கப்பட்டாா்.

நீா்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் கிலோ கிளாஸ் நீா் மூழ்கிக் கப்பல்களில் அனுபவம் பெற்றவா். ஐஎன்எஸ் ராஜ்புத் சேவையில், அவா் தலைமை வகித்தாா்.

நீலகிரி மாவட்டம் உதகை வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளா் கல்லூரியில் பட்டம் பெற்றாா். மேலும், அவா் கோவாவில் கடற்படை உயா் படிப்பை முடித்தாா்.

முன்னதாக அவா் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படைப் பகுதியின் தலைமைப் பணியாளா் அதிகாரியாக பணியாற்றினாா்.

X
Dinamani
www.dinamani.com