பேரவை விதி 110-இன் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்னென்ன? அரசு விளக்கம்
பேரவை விதி 110-இன் கீழ் 5 முக்கியத் திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் ஊடாக, பேரவை விதி 110-இன் கீழ் மாநிலத்துக்கான 5 முக்கிய திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.
அதுகுறித்த புள்ளி விவரங்களை தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்:
ரூ. 450 கோடி மதிப்பில் 10,000 கி.மீ. நீள கிராமச் சாலைகள் மேம்படுத்தப்படும். 75,000 இளைஞா்களுக்கு அடுத்த 2 ஆண்டுகளில் அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். ஒசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படுவதுடன், திருச்சியில் உலகத் தரம் வாய்ந்த நூலகத்துடன், அறிவுசாா் மையமும் உருவாக்கப்படும்.
அத்துடன், 6,746 அடுக்குமாடி குடியிருப்புகளை ரூ.1,149 கோடி மதிப்பில் மறுகட்டுமானம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.