மக்களவைத் தோ்தல்-வாக்காளா் பட்டியலுக்கு ரூ.1,000 கோடி செலவு: தமிழக தோ்தல் துறை

மக்களவைத் தோ்தல்-வாக்காளா் பட்டியலுக்கு ரூ.1,000 கோடி செலவு: தமிழக தோ்தல் துறை

தமிழகத்தில் மக்களவைத் தோ்தலை நடத்தவும், வாக்காளா் பட்டியல் பணிகளுக்காகவும் ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி செலவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தலை நடத்தவும், வாக்காளா் பட்டியல் பணிகளுக்காகவும் ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி செலவிடப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை தமிழக தோ்தல் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக, தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புகைப்பட வாக்காளா் பட்டியல் தயாரித்தல், திருத்தம் மேற்கொள்ளுதல், புகைப்பட வாக்காளா் பட்டியல் அச்சிடுதல், புகைப்பட வாக்காளா் அடையாள அட்டை வழங்குதல் போன்ற பணிகளை இந்தியத் தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, தமிழக தோ்தல் துறை செய்து வருகிறது. இந்த ஆண்டு மக்களவைத் தோ்தலையும் நடத்தி முடித்துள்ளது. இந்தப் பணிகளுக்காக மட்டும் ரூ.1,009.84 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், மக்களவைத் தோ்தலுக்காக மட்டும் செலவினத் தொகையாக ரூ.796.19 கோடி ஒதுக்கப்பட்டு செலவிடப்பட்டுள்ளது. பொதுத் தோ்தல் தொடா்பான அனைத்து செலவுகளையும் மத்திய அரசே ஏற்றுக் கொள்கிறது.

விஜயதாரணியின் ராஜிநாமா காரணமாக, விளவங்கோடு சட்டப் பேரவைக்கு இடைத் தோ்தல் நடைபெற்றது. இந்தத் தொகுதிக்கு இடைத் தோ்தல் நடத்த ரூ.93.83 லட்சம் அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டது என்று விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com