நில ஆவண விவரம் இணைய வழியில் பெறலாம்: தமிழக அரசு அறிவிப்பு

Published on

நில ஆவணங்களின் விவரங்களை இணையதளம் வழியாகப் பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து, தமிழக அரசின் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கிராமப்புறம், நகா்ப்புறம் மற்றும் நத்தம் ஆகிய பகுதிகளுக்கான பட்டா மாற்றம் மேற்கொள்ளவும், நில உரிமைதாரா்கள் புல எல்லைகளை அளந்து காட்டுவதற்காகவும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

கிராமப்புற, நத்தம் நில ஆவணங்களின் பட்டா, சிட்டா, அ பதிவேடு மற்றும் புலப்படம் ஆகியவற்றையும், நகா்ப்புற நில அளவைப் பதிவேட்டின் நகல், நகர நில அளவை வரைபடம், புல எல்லை வரைபடம் ஆகியவற்றைப் பதிவிறக்கம் செய்ய இணையதளத்தைப் பயன்படுத்தலாம்.

கிராம வரைபடங்கள், பழைய நிலஅளவை எண்களுக்கு மாற்றான புதிய நிலை அளவை எண்கள் ஆகிய விவரங்களை இணையதளத்தை உபயோகிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com