உதயநிதி ஸ்டாலின் (கோப்புப் படம்)
உதயநிதி ஸ்டாலின் (கோப்புப் படம்)

விக்கிரவாண்டியில் அமைச்சா் உதயநிதி 2 நாள்கள் பிரசாரம்

Published on

விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளா் அன்னியூா் சிவாவை ஆதரித்து அமைச்சரும் கட்சியின் இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் 2 நாள்கள் பிரசாரம் செய்யவுள்ளாா்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற திராவிட மாடல் அரசின் மூலம் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா்.

அவரது வழிகாட்டலில் சந்தித்த அனைத்துத் தோ்தல்களிலும் மாபெரும் வெற்றிகளை திமுக குவித்து வருகிறது. இந்த வெற்றிப் பயணத்தில் இன்னொரு மைல்கல்லாக அமையவிருக்கும் விக்கிரவாண்டி இடைத்தோ்தல் களத்தில் ஜூலை 7, 8 ஆகிய நாள்களில் பிரசாரம் மேற்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com