கோப்புப்படம்
கோப்புப்படம்

தக்காளி விலை குறைந்தது: பூண்டு ஒருகிலோ ரூ.360

ஒருகிலோ வெங்காயம் ரூ.38-க்கும், சின்ன வெங்காயம் ரூ.80-க்கும் விற்பனை

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை குறைந்துள்ள நிலையில், ஒருகிலோ பூண்டு ரூ.360-ஆக உயா்ந்துள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில், மே மாதம் முதல் காய்கறிகளின் வரத்து குறைந்ததையடுத்து, விலையும் கடுமையாக உயா்ந்தது. அனைத்து காய்கறிகளும் ரூ.20 முதல் ரூ.150 வரை அதிகரித்து விற்பனையானது. கடந்த 2 மாதங்களாக விலை அதிகரித்திருந்த நிலையில், ஜூலை மாதம் தொடங்கியதில் இருந்தே காய்கறிகளின் விலை சற்று குறைய தொடங்கியது.

இதன்படி, ஜூன் மாதம் கடைசி வாரத்தில் ரூ.60-க்கு விற்பனையான ஒருகிலோ தக்காளி, ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒருகிலோ வெங்காயம் ரூ.38-க்கும், ஒருகிலோ சின்ன வெங்காயம் ரூ.80-க்கும், ஒருகிலோ ஊட்டி கேரட் ரூ.70-க்கும், ஒருகிலோ பீன்ஸ் ரூ.100-க்கும், ஒருகிலோ பீட்ரூட் மற்றும் முட்டை கோஸ் தலா ரூ.40-க்கும், ஒருகிலோ கத்தரிக்காய், வெண்டைக்காய் மற்றும் பச்சை மிளகாய் தலா ரூ.45-க்கும், ஒருகிலோ முருங்கைக்காய் ரூ.110-க்கும், ஒருகிலோ எலுமிச்சை ரூ.110-க்கும், ஒருகிலோ பட்டாணி ரூ.200-க்கும், ஒருகிலோ இஞ்சி ரூ.140-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக ஒருகிலோ பூண்டு ரூ.360-க்கு விற்பனை செய்யப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com