காவல் ஆணையர் அருண்
காவல் ஆணையர் அருண்

ரௌடிகளுக்குப் புரியும் மொழியில் நடவடிக்கை: புதிய காவல் ஆணையர் அருண் அதிரடி!

ரௌடிகளுக்குப் புரியும் மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய ஆணையராக பொறுப்பேற்ற அருண் கூறினார்.
Published on

சென்னை: சென்னையில் ரௌடிகளை கட்டுப்படுத்துவதே முதன்மையான பணி, ரௌடிகளுக்குப் புரியும் மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய ஆணையராக பொறுப்பேற்ற அருண் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் இன்று சென்னை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

சென்னை மாநகரக் காவல் ஆணையரகத்தில் இன்று பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, சென்னையில் ரௌடிகளை கட்டுப்படுத்துவதே முதன்மையான பணி. சென்னையில் சட்டம் ஒழுங்கு நிலை நாட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

குற்றங்களை கண்டுபிடிக்க, போக்குவரத்து சிக்கல்களை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். என்னை நம்பி பொறுப்பை ஒப்படைத்த முதல்வரின் நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன்.

ரௌடிகளுக்கு அவர்களுக்கு புரியும் மொழியில் நடவடிக்கையான எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com