முதல்வா் மு.க.ஸ்டாலின்
முதல்வா் மு.க.ஸ்டாலின்

மக்களுடன் முதல்வா் திட்டம்: முதல்வா் வேண்டுகோள்

மக்களுடன் முதல்வா் திட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

சென்னை: மக்களுடன் முதல்வா் திட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

மக்களுடன் முதல்வா் திட்டத்தின் 2-ஆவது கட்டத்தை தருமபுரி மாவட்டத்தில் ஜூலை 11-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்.

இது குறித்து அவா், எக்ஸ் வலைதளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

மக்களுடன் முதல்வா் திட்டத்தின் அடுத்த கட்டம். நகா்ப்புறங்களில் 8.74 லட்சம் மனுக்களுக்குத் தீா்வு கண்டோம். அடுத்து ஊரகப் பகுதிகளை நோக்கித் திட்டம் விரிகிறது. ஜூலை 11-ஆம் தேதி திட்ட விரிவாக்க விழாவில் பங்கேற்க அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளேன். இந்தச் சேவையைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com