18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் அமலாக்கப்பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அபின் தினேஷ் ஐபிஎஸ் தாம்பரம் காவல் ஆணையராகவும், ஜெய்ராம் ஐபிஎஸ் மாநில குற்ற ஆவணப்பிரிவு ஏடிஜிபியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மகேஷ் குமார் அகர்வால் ஆயுதப்படை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்ட காவல் ஆணையர் விஜயகுமாரி ஆயுதப்படை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மண்டல ஐஜியாக அஸ்ரா கார்க்கும், கண்ணன் ஐபிஎஸ் சட்டம் - ஒழுங்கு கூடுதல் ஆணையர் தெற்கு, பிரவின் குமார் அபிநபு சேலம் மாநகர காவல் ஆணையராகுவும், திருப்பூர் மாநகர காவல் ஆணையராக எஸ்.லட்சுமியும், தென் மண்டல ஐஜியாக பிரேம் ஆனந்த் சின்ஹாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வெங்கட் ராமன் ஐபிஎஸ் ஆயுதப்படை கூடுதல் ஆணையராகவும், வினித் தேவ் தலைமைச் செயலக கூடுதல் டிஜிபியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இணைப்பு
PDF
18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்ற விவரம்
பார்க்க

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com