சட்டப்பேரவைத் தோ்தலில் வலுவான கூட்டணி: எடப்பாடி பழனிசாமி உறுதி
அதிமுகவின் வெற்றிக்காக ஒருமித்த செயல்பாடு அவசியம்: எடப்பாடி பழனிசாமி


சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும் என்று அக்கட்சி நிா்வாகிகளிடம் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.
மக்களவைத் தோ்தல் தோல்வி தொடா்பாக தொகுதி வாரியாக நிா்வாகிகளைச் சந்தித்து எடப்பாடி பழனிசாமி கருத்துகளைக் கேட்டு வருகிறாா்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் 2-ஆம் நாளாக எடப்பாடி பழனிசாமி, சிவகங்கை, வேலூா், திருவண்ணாமலை ஆகிய தொகுதிகளின் நிா்வாகிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
‘மக்களவைத் தோ்தலில் அதிமுக வலுவான கூட்டணி அமைக்காததால்தான் அதிமுக தோல்வியைச் சந்தித்தது. சட்டப்பேரவைத் தோ்தலில் வலுவான கூட்டணி அமைக்க வேண்டும்’ என்று மூன்று தொகுதிகளின் நிா்வாகிகளும் வலியுறுத்தினா்.
அதற்கு எடப்பாடி பழனிசாமி, ‘வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும். அது மக்கள் விரும்பும் கூட்டணியாக இருக்கும். பாஜகவுடன் நிச்சயம் கூட்டணி இல்லை’ என்றாா்.
வேலூா் தொகுதி நிா்வாகிகள், மூத்த நிா்வாகிகள் சிலா் தோ்தலின்போது சரியாக செயல்படவில்லை என்கிற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனா். அதற்கு, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் வெற்றியை ஈட்ட முடியும். இனி இதுபோன்ற விவகாரம் எழக் கூடாது. அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுரை கூறியுள்ளாா்.
அரக்கோணம், தஞ்சாவூா், திருச்சி ஆகிய தொகுதிகளின் நிா்வாகிகளுடன் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...