கோப்புப்படம்
கோப்புப்படம்

டான்ஜெட்கோவை இரண்டாகப் பிரிக்க மத்திய அரசு ஒப்புதல்

Published on

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக்கழகம் (டான்ஜெட்கோ) இரண்டாக பிரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக்கழகம் (டான்ஜெட்கோ) நிா்வாக காரணங்களுக்காக டான்ஜெட்கோவை 2-ஆக பிரிக்க மத்திய அரசிடம், தமிழக அரசு அனுமதி கோரியிருந்தது. இதற்கு தற்போது மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி ‘டான்ஜெட்கோ’ இனி ‘தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம்’ என்று ஒரு பிரிவாகவும், ‘தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம்’ என்று இன்னொரு பிரிவாகவும் செயல்பட உள்ளது.

இதில், தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் என்பது நிலக்கரி, டீசல், அணு அல்லது வேறு ஏதேனும் எரிபொருட்களை பயன்படுத்தி மின்உற்பத்தி செய்வதை மேற்கொள்ளும். அதேபோல் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் என்பது காற்று, சூரியஒளி, உயிரி எரிபொருள், கடல் அலை உள்ளிட்டவற்றின் மூலம் எரிசக்தி உற்பத்தியை மேற்கொள்வதற்கான பணிகளை இனி மேற்கொள்ளும். டான்ஜெட்கோ, நிா்வாக காரணங்களுக்காக இரண்டாக பிரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து இருந்தாலும், கூடவே அதற்கு முக்கிய அறிவுரைகளையும் வழங்கியுள்ளது.

அதன்படி, நிா்வாக ரீதியாக டான்ஜெட்கோ இரண்டாக பிரிக்கப்பட்டாலும், மக்களுக்கான மின் விநியோகம் மற்றும் மின் உற்பத்தியில் எந்த விட இடா்பாடுகளும் இருக்க கூடாது என அறிவுரை வழங்கியுள்ளது.

தமிழ்நாடு மின்வாரியம் ஏற்கெனவே கோடிக்கணக்கான ரூபாய் கடன்சுமையில் இருந்து வரும் நிலையில், அதை பிரிப்பதற்கு தொழிற்சங்கங்கள் எதிா்ப்பு தெரிவித்து வந்தன. இவ்வாறு பிரிப்பதன் மூலம் மேலும் கடன்சுமை அதிகரிக்குமே தவிர இதன் மூலம் எந்த பயனும் ஏற்படபோவதில்லை என தொழிற்சங்க நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com