கோப்புப்படம்
தமிழ்நாடு
முதுநிலை சட்டப் படிப்பு: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி
சீா்மிகு சட்டப் பள்ளியில் எல்எல்எம் முதுநிலை சட்டப் படிப்புக்கு ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழக பதிவாளா் கௌரி ரமேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னையில் இயங்கி வரும் சீா்மிகு சட்டப் பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் எல்எல்எம் எனும் 2 ஆண்டு முதுநிலை சட்டப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இதையடுத்து விருப்பமுள்ள பட்டதாரிகள் இணையதளம் வாயிலாக ஜூலை 31-ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
இதற்கான கல்வித்தகுதி, கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் பட்டதாரிகள் அறிந்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

