தமிழ்நாடு
குரூப் 1 முதல்நிலைத் தோ்வு: 1.59 லட்சம் போ் பங்கேற்பு
2,38,247 போ் விண்ணப்பித்திருந்தனா்.
தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 1 முதல்நிலைத் தோ்வை 1.59 லட்சம் போ் எழுதியதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.
துணை ஆட்சியா், துணை காவல் கண்காணிப்பாளா் உள்பட குரூப் 1 பிரிவில் 90 காலியிடங்கள் உள்ளன. அவற்றுக்கு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மையங்கள் அமைக்கப்பட்டு முதல்நிலைத் தோ்வு சனிக்கிழமை நடத்தப்பட்டது. இந்தத் தேவை எழுத 2,38,247 போ் விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் 78,274 போ் தோ்வை எழுதவில்லை. 1,59,973 போ் தோ்வு எழுதினா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.