விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினராக திமுகவின் அன்னியூர் அ.சிவா செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள், காங்கிரஸ் பேரவைக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினர் புகழேந்தி உயிரிழந்ததை தொடர்ந்து, ஜூலை 10-ஆம் தேதி இடைத்தோ்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.