உள்துறைச் செயலர் உள்பட 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்!

சென்னை மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்..
உள்துறைச் செயலர் உள்பட 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்!
Published on
Updated on
2 min read

தமிழக உள்துறைச் செயலர் உள்பட 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உள்துறைச் செயலர் அமுதா அமுதா வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். உள்துறைச் செயலராக தீரஜ் குமார் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.

வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலராக பொறுப்புவகித்த வி. ராஜாராமன் ஐ.ஏ.எஸ். தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வருவாய் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ள அமுதா ஐ.ஏ.எஸ்
வருவாய் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ள அமுதா ஐ.ஏ.எஸ்
  • சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் மாற்றப்பட்டு, பள்ளிக்கல்வித் துறை செயலராக இருந்த ஜெ. குமரகுருபரன் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராகவும்,

  • கூட்டுறவுத்துறை சங்கங்களின் கூடுதல் பதிவாளராக பொறுப்புவகித்த டாக்டர் ஜெ. விஜயா ராணி இணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  • டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் உணவு, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவுத்துறை கூடுதல் முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • சிட்கோ மேலாண் இயக்குநராக செயல்பட்ட எஸ். மதுமதி ஐ. ஏ. எஸ். பள்ளிக்கல்வித்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • உணவு, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவுத்துறை கூடுதல் முதன்மைச் செயலராக பொறுப்புவகித்த டாக்டர் கே. கோபால் ஐ. ஏ. எஸ். கால்நடை, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை கூடுதல் முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • ஈரோடு மாநகராட்சி ஆணையராக டாக்டர் நார்ணவாரே மணீஷ் சங்கர்ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • சேலம் மாநகராட்சி ஆணையர் எஸ். பாலசந்தர் தாம்பரம் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலராக(ஆணையர்) பொறுப்புவகித்த ஹர் சஹாய் மீனா ஐ.ஏ.எஸ். சிறப்பு புத்தாக்கத்துறை முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலராக கே. வீர ராகவ ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • தகவல் தொழில்நுட்பம் மற்றும் எண்மியல்(டிஜிட்டல்) சேவைகள் துறை கூடுதல் முதன்மைச் செயலராக குமார் ஜெயந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • கலால்துறை கூடுதல் முதன்மைச் செயலராக தீரஜ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை கூடுதல் செயலராக எஸ். சுரேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • நிதித்துறை துணைச் செயலராக சி. ஏ. ரிஷப் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • பொதுத்துறை துணைச் செயலராக பி. விஷ்ணு சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • சமூக நலத்துறை, மகளிர் மேம்பாட்டுத்துறை இணைச் செயலராக எஸ். வளர்மதி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கூடுதலாக தமிழநாடு அரசின் பணிபுரியும் பெண்களுக்கான விடுதி நிர்வாகத்தின் மேலாண் இயக்குநராகவும் பொறுப்புவகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • கலால்துறை இணைச் செயலராக ஜெ. ஆனி மேரி சுவர்ணா நியமிக்கப்பட்டுள்ளார்.

  • வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை இணைச் செயலராக ஷ்ரவன் குமார் ஜதாவத் நியமிக்கப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் ஆட்சியர் பி.விஷ்ணு சந்திரன், ராணிப்பேட்டை ஆட்சியர் எஸ். வளர்மதி, அரியலூர் ஆட்சியர் ஜெ. ஆனி மேரி சுவர்ணா, கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஜதாவத் ஆகியோரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com