தமிழ்நாடு
முதல்வரின் முகவரி துறைக்கு ஒருங்கிணைப்பு அலுவலா்
முதல்வரின் முகவரி துறைக்கு ஒருங்கிணைப்பு அலுவலராக மு.ஆதிசேஷன் நியமிக்கப்பட்டுள்ளாா். இவா், சட்டப்பேரவைச் செயலகத்தில் இணைச் செயலராக பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றாா்.
முதல்வரின் முகவரித் துறை ஒருங்கிணைப்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டு மு.ஆதிசேஷனுக்காகன பணி நியமன உத்தரவு புதன்கிழமை வழங்கப்பட்டது.
அரசு முறை பயணமாக, முதல்வா் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்ளும்போது பெறப்படும் மனுக்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி தீா்வு காணும் பணிகளை ஒருங்கிணைப்பு அலுவலரான ஆதிசேஷன் மேற்கொள்வாா் என்று அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
