தொழில்பழகுநர் வாய்ப்பளிக்கும் பாலிடெக்னிக் கல்லூரிகள்!

பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்க்கை விகிதம் குறைந்து வருவதால் பாடத்திட்டத்தில் திருத்தம்
சித்தரிக்கப்பட்ட படம்
சித்தரிக்கப்பட்ட படம்
Published on
Updated on
1 min read

பாலிடெக்னிக் கல்லூரிகளில் இந்தாண்டும் சேர்க்கை விகிதம் குறைந்து விட்டதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

2022 - 23ஆம் கல்வியாண்டில் 496 பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,62,341 இடங்கள் இருந்தபோதிலும், 68,888 மாணவர்கள் மட்டுமே சேர்ந்திருந்தனர். 2023 - 24ஆம் கல்வியாண்டில் 492 கல்லூரிகளில் 1,54,389 இடங்கள் இருந்தபோதிலும், சேர்க்கை 63,561ஆக மீண்டும் குறைந்தது.

அரசுக் கல்லூரிகளில் 51% இடங்களும், உதவிபெறும் கல்லூரிகளில் 49% இடங்களும், சுயஉதவிக் கல்லூரிகளில் 23% இடங்களும் மற்றும் ஹோட்டல் நிர்வாகத்தில் 32% இடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, கடந்தாண்டு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் பாடத்திட்டத்தினை திருத்தியமைத்தது. திருத்தப்பட்ட பாடத்திட்டம் இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படுவதாக, கல்வி ஆணையர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.

புதிய பாடத்திட்டத்தில் ஆறாவது பருவத்தில் மாணவர்களுக்கு தொழில்பழகுநர் வாய்ப்புகள் அடங்கும். இந்த செயல்முறை 2025 - 26ஆம் ஆண்டில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட உள்ளது.

பாலிடெக்னிக் கல்லூரிகளின் சேர்க்கை விகிதம் குறைந்தது தொடர்பாக ஈரோடு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் எம்.சத்யன் ``அரசுப்பள்ளி மாணவர்கள் தான் அதிகளவில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்கிறார்கள்; அதிக குடும்ப வருமானம் கொண்டவர்கள் பொறியியல் அல்லது கலை, அறிவியல் கல்லூரிகளிலேயே சேர்கிறார்கள்” என்று தெரிவிக்கிறார்.

சித்தரிக்கப்பட்ட படம்
செந்தில் பாலாஜியை விடுவிக்க மறுப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com