
கரூர்: சொத்து மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை மற்றொரு வழக்கில் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சிபிசிஐடி போலீசார் மூலம் கைது செய்யப்பட்டுள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் 15 நாள்கள் நீதிமன்ற காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கரூர் வாங்கலைச் சேர்ந்த பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மீண்டும் சிறையில் உள்ள விஜயபாஸ்கரை வியாழக்கிழமை காலை கைது செய்தனர். இதற்கான ஆணை திருச்சி மத்திய சிறையில் இருக்கும் விஜயபாஸ்கரிடம் வழங்கப்பட்டது.
மேலும், இந்த வழக்கில் நாளை அல்லது நாளை மறுநாள் விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர் பிரவீன் ஆகிய இருவரும் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.