‘பேரவைக்குள் குட்கா’: ஜூலை 22-இல் தீா்ப்பு

‘பேரவைக்குள் குட்கா’: ஜூலை 22-இல் தீா்ப்பு
Updated on

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடா்பாக, அப்போதைய எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.-க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்ததை  எதிா்த்து, முந்தைய ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு  மனுக்கள் மீது சென்னை உயா்நீதிமன்றம் ஜூலை 22- ஆம் தேதி தீா்ப்பளிக்கவுள்ளது.

2017-ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ாக அப்போதைய எதிா்க்கட்சித் தலைவா் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவை உரிமைக் குழு அனுப்பிய 2 உரிமை மீறல் நோட்டீஸ்களையும்  சென்னை உயா்நீதிமன்றம்  ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.

இதை எதிா்த்து முந்தைய அதிமுக ஆட்சியில், சட்டப்பேரவைச் செயலா் மற்றும் உரிமைக் குழு சாா்பில் மேல் முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், குமரப்பன் ஆகியோா் அடங்கிய  அமா்வு தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தது.

இந்நிலையில், ஜூலை 22-ஆம் தேதி இவ்வழக்கில் தீா்ப்பளிக்கப்படவுள்ளது. நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தலைமையிலான அமா்வில், தீா்ப்புக்கான முதல் வழக்காக இந்த வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com