
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலக் குறைவால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புழல் சிறையில் இருந்து ஸ்டான்லி மருத்தவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட செந்தில் பாலாஜிக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் மருத்துவர்களின் பரிந்துரையை அடுத்டுது ஓமந்தூரால் மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி அழைத்துச் செல்லப்பட்டார்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.
தற்போது புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 48-ஆவது முறையாக அண்மையில் நீட்டிக்கப்பட்டது.
இதனிடயே செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு வருகிற 22 ஆம் தேதி(நாளை) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.