ஸ்டாலினின் மகனுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது ஏற்புடையதல்ல: இபிஎஸ்

ஸ்டாலினின் மகனுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது ஏற்புடையதல்ல என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தபோது.
எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தபோது.
Published on
Updated on
1 min read

ஸ்டாலினின் மகனுக்கு துணை முதல்வர் பதவியை வழங்குவது ஏற்புடையதல்ல என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தலைமையில் நாகப்பட்டினம் பாங்கல் பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகி நேதாஜி உள்ளிட்ட 160 பேர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனர். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ஏழை, எளிய தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் சுவையான உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக அம்மா உணவகம் தமிழ்நாடு முழுவதும் மலிவு விலையில் உணவு வழங்கி வருகிறது.

அப்படிப்பட்ட அம்மா உணவகம் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சரியான முறையில் செயல்படவில்லை. தரமான பொருட்கள் வழங்கப்படவில்லை. இதனால் தரமான உணவு தயாரித்து ஏழை, எளியவருக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அதன் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளனர். திமுக பொறுப்பேற்ற பிறகு சென்னையில் 19 அம்மா உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. அம்மா உணவகத்தில் நேற்று முன்தினம் முதல்வர் ஆய்வு செய்து சோதனை செய்தார்.

எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தபோது.
கேரளம்: நிஃபா வைரஸால் பாதிக்கப்பட்ட சிறுவன் பலி!

அந்த சோதனையை மூன்றாண்டு காலம் ஏன் செய்யவில்லை. இந்த திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு அம்மா உணவகத்தை சரியான முறையில் நிர்வகிக்கவில்லை. அம்மா உணவகத்தின் மீது அக்கறை இருந்தால் கடந்த மூன்று ஆண்டு காலத்தில் ஆட்சியாளர்கள் ஆய்வு செய்திருக்க வேண்டும். இந்த திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டு தற்போது இந்த ஆய்வு நடைபெற்று இருக்கிறது. அம்மா உணவகத்தின் மீது அரசு கவனம் செலுத்தாத காரணத்தினால் ஏழை, எளிய மக்கள் சரியான உணவு கிடைக்காததால் இந்த ஆட்சியாளர்கள் மீது ஏழை, எளிய தொழிலாளர்கள் வெறுப்பில் உள்ளனர்.

இதனை அறிந்த பிறகு முதல்வர் இந்த ஆய்வை நடத்தியுள்ளார். திமுக குடும்பக் கட்சியாக ஆட்சியும் நடத்தி வருகிறது. துணை முதல்வர் பதவி ஸ்டாலினின் மகனுக்கு வழங்குவது ஏற்புடையதல்ல. திமுகவில் எத்தனையோ மூத்த முன்னோடிகள் உள்ளனர். அவர்களுக்கு ஏன் துணை முதல்வர் பதவி வழங்க முன்வரக்கூடாது. திமுக அரசு இதுவரை மூன்று லட்சத்து 65 ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளது. தமிழக அரசு கடனில் தான் செயல்பட்டு வருகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com