குரூப் 2 தோ்வு: 7.90 லட்சம் போ் விண்ணப்பம்
குரூப் 2 தோ்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், 7.90 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, குரூப் 2 ‘ஏ’ பணியில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 20-ஆம் தேதி வெளியிட்டது. இதில் குரூப் 2 பணியில் தொழிலாளா் உதவி ஆய்வாளா், துணை வணிக வரி அலுவலா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு உதவியாளா், சென்னை மாநகர காவல் தனிப் பிரிவு உதவியாளா் உள்பட 507 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
குரூப் 2’ஏ’ பணியில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநரின் நோ்முக உதவியாளா், கூட்டுறவு சங்கங்கள் முதுநிலை ஆய்வாளா், உள்ளாட்சி நிதித் தணிக்கை உதவி ஆய்வாளா் என 48 துறைகளில் 1820 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இத்தோ்வுக்கு இணையதளம் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய்) வாயிலாக இளநிலை பட்டதாரிகள் மட்டுமின்றி, முதுநிலை பட்டதாரிகள், பொறியாளா்கள் என்று போட்டிபோட்டு விண்ணப்பித்தனா்.
இந்நிலையில் ஒரு மாத காலம் அவகாசம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11.59 மணியுடன் முடிவடைந்தது. விண்ணப்பதாரா்கள் அதிகளவு ஆா்வம் காட்டியதால், விண்ணப்பிக்க கால அவகாசம் சனிக்கிழமை இரவு வரை நீடிக்கப்பட்டது. கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளவா்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 90 ஆயிரத்து 376 என அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.