சென்னையில் நாளைமுதல் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கம்: முழு அட்டவணை!

சென்னையில் 55 மின்சார ரயில்கள் நாளைமுதல் ஆக. 14 வரை இயங்காது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

தாம்பரம் ரயில்வே நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளதால் 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சிறப்பு ரயில்களுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஜூலை 23, 2024 முதல் ஆகஸ்ட் 14, 2024 வரை தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை கடற்கரை-தாம்பரம்- செங்கல்பட்டு இடையே மேலே குறிப்பிட்ட நாள்களில் 55 மின்சார ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கு பதிலாக கடற்கரை முதல் பல்லாவரம் வரையிலும், கூடுவாஞ்சேரி முதல் செங்கல்பட்டு வரையிலும் இரு மார்க்கங்களிலும் சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்ட 55 மின்சார ரயில்கள்

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு

காலை 09:30, 09:56, 10:56, 11:40, நண்பகல் 12:20, 12:40 மற்றும் இரவு 10:40 மணி.

சென்னை கடற்கரை - தாம்பரம்

காலை 09:40, 09:48, 10:04, 10:12, 10:24, 10:30, 10:36, 10:46, 11:06, 11:14, 11:22, 11:30, 11:50, நண்பகல் 12:00, 12:10, 12:30, 12:50 மற்றும் 2 11:05, 11:30, 11:59 மணி.

சென்னை கடற்கரை - கூடுவாஞ்சேரி

காலை 07:19, 08:15, 08:45, 08:55, 09:40 மணி.

தாம்பரம் - சென்னை கடற்கரை

காலை 10:30, 10:40, 11:00, 11:10, 11:30, 11:40, ល់ 12:05, 12:35 5 01:00 01:30 மற்றும் இரவு 11:40 மணி.

செங்கல்பட்டு கும்மிடிபூண்டி - காலை 10:00 மணி.

காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை - காலை 09:30 மணி.

திருமால்பூர் - சென்னை கடற்கரை - காலை 11:05 மணி.

செங்கல்பட்டு - சென்னை கடற்கரை

காலை 11:00, 11:30, நண்பகல் 12:00 மற்றும் இரவு 11:00 மணி.

கூடுவாஞ்சேரி -சென்னை கடற்கரை

08:55, 09:45, 10:10, 10:25, 11:20 மணி.

கோப்புப்படம்
தென்மாவட்ட ரயில்கள் நாளைமுதல் சென்னை வராது!

ரத்து செய்யப்பட்ட மின்சார ரயில்களுக்கு பதிலாக இயக்கப்படும் சிறப்பு மின்சார ரயில்களின் கால அட்டவணை

சென்னை கடற்கரை - பல்லாவரம்

நேரம் 09:30, 09:50, 10:10, 10:30, 10:50, 11:10, 11:30, 11:50, ល់ 12:10, 12:30, 12:50 மற்றும் இரவு 10:40, 11:05, 11:30, 11:59 மணி.

பல்லாவரம் - சென்னை கடற்கரை

10:20, 10:40, 11:00, 11:20, 11:40, ល់ 12:00, 12:20, 12:40, 01:20, 01:40, 2 11:30, 11:55, 12:20, 12:45 மணி.

கூடுவாஞ்சேரி - செங்கல்பட்டு

10:45, 11:10, ល់ 12:00, 12:50, மதியம் 01:35, 01:55 மற்றும் இரவு 11:55 மணி.

செங்கல்பட்டு - கூடுவாஞ்சேரி

காலை 10:00, 10:30, 11:00, 11:45, நண்பகல் 12:30, மதியம் 01:00 மற்றும் இரவு 11:00 மணி.

அதிகாலை முதல் காலை 09:20 மணி வரையும், மதியம் 01:00 மணியிலிருந்து இரவு 10:20 வரையும் வழக்கம்போல் அட்டவணைப்படி இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பயணிகளின் சிரமத்தை குறைப்பதற்காக, பல்லாவரத்திலிருந்து கூடுவாஞ்சேரி வரை இரு மார்க்கங்களிலும் கூடுதல் பேருந்து சேவைகளை இயக்குவதற்கு மாநில போக்குவரத்து துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை எழும்பூர், பல்லாவரம், தாம்பரம், கூடுவாஞ்சேரி ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகள் உதவி மையத்தை (Passenger Help Desk) தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com