நில மோசடி வழக்கு: நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜர்

நில மோசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர் பிரவீன் ஆகியோர் திங்கள்கிழமை காலை கரூர் நீதிமன்றத்தில் ஆச்சார்படுத்தப்பட்டனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்படும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்படும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
Published on
Updated on
1 min read

நில மோசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர் பிரவீன் ஆகியோர் திங்கள்கிழமை காலை கரூர் நீதிமன்றத்தில் ஆச்சார்படுத்தப்பட்டனர்.

கரூர் அடுத்த வாங்கல் குப்புச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கடந்த மாதம் 14ஆம் தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி சேகர் உள்பட மூன்று பேர் சேர்ந்து தனது ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து அபகரித்து விட்டதாக கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்நிலையில் இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் எனக் கூறி முன்னாள் அமைச்சர் எம் .ஆர் .விஜயபாஸ்கர் அவரது தம்பி சேகர் ஆகியோர் கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஜூன் 12ஆம் தேதி மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை கடந்த ஜூன் 25 ஆம் தேதி விசாரித்த மாவட்ட அமர்வு நீதிபதி முன் ஜாமினை தள்ளுபடி செய்தார். இதனிடையே இந்த வழக்கானது சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. இதை யடுத்து கரூர் மாவட்ட சிபிசிஐடி போலீசார் 8 தனிப்படைகள் அமைத்து தலைமறைவான முன்னாள் அமைச்சர் எம் .ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி உள்ளிட்டோரை தேடி தேடி வந்தனர். இந்நிலையில் 35 நாட்களுக்கு மேல் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர் பிரவீன் ஆகியோர் கேரள மாநிலம் திருச்சூரில் கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்படும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
செந்தில் பாலாஜி வழக்கு ஜூலை 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையிலும் பிரவீன் குளித்தலை களச்சரையிலும் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் வாங்கல் காவல் நிலையத்தில் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் கடந்த 12ஆம் தேதி முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-2ல் நீதிபதி பரத்குமார் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டார்.

இந்நிலையில் கரூர் நகர காவல் நிலையத்தில் பிரகாஷ் அளித்த புகாரின் பேரிலும், கரூர் சார்பதிவாளர் அளித்த புகாரின் பேரிலும் முன்னாள் அமைச்சர் மற்றும் பிரவீன் ஆகியோரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கேட்டிருந்தனர். இதையடுத்து திங்கள்கிழமை காலை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் பிரவீன் ஆகியோரை கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்1-ல் ஆஜர் படுத்தினர் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com